Ayaan Footprints
Ayaan Testimonials
எனது பெயர் சி. வாஞ்சிநாதன், நான் ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்தவன் எனது பள்ளி படிப்பை எடுத்துவாய் நத்தம் எனும் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் பயின்றேன். 10 மற்றும் 12-ஆம் வகுப்பில்3 வது மாணவனாக இருந்தேன். 10-ஆம் வகுப்பில் 467 / 500 மதிப்பெண்களும், 12- ஆம் வகுப்பில் 1041/1200 மதிப்பெண்களும் பெற்றேன். 12-ஆம் வகுப்பு பொது தேர்வுக்கு முன் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிறந்த மாணவர்களுக்கான சிறப்பு வகுப்பை, மாவட்ட கல்வி அலுவலர் திரு.மார்ஸ் அவர்கள் அமைத்து சிறந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சி அளித்தனர். அங்கு மாணவர்களுக்கு ஊக்கத்தை அளிக்கும் வகையில் அயான் பவுண்டேசன் எனும் தொண்டு நிறுவனம் மாணவர்களுக்கு வாழ்வியல் திறன் பயிற்சி அளித்தனர். அங்கு கெளசல்யா எனும் தமக்கை எனக்கு தேர்விற்கு வழிகாட்டியாக திகழ்ந்தார். பொது தேர்விற்கு பிறகு எனக்கு அயான் தொண்டு நிறுவனத்திலிருந்து அழைப்பு வந்தது. அவர்கள் எனக்கு உதவித் தொகை கொடுத்து படிக்க வைத்தனர். எனக்கு தொழில் நுட்பத்தில் இருந்த ஆர்வத்தால் மின்னியியல் மற்றும் மின்னணுவியல் பிரிவில் சேர்ந்தேன். நான் படித்து முடித்ததும் மென் பொருள் நிறுவனத்தில் 3 லட்சம் ஆண்டு வருமானத்தில் வேலை கிடைத்துள்ளது. எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய அயான் பவுண்டேசனுக்கு எனது மனமார்ந்த நன்றி..
நான் ப.ராஜ ஸ்ரீ, நங்கநல்லூரில் உள்ள ஜெயகோபால் கரோடியா அரசினர் மேல்நிலைப் பள்ளியில் எனது பள்ளி படிப்பை முடித்தேன். 2017 ஆம் ஆண்டு அயான் தொண்டு நிறுவனத்திலிருந்து எங்கள் பள்ளிக்கு பொது தேர்வை எதிர்கொள்ளவிருக்கும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு எடுக்கப்பட்டது. எங்களுக்கு சிறப்பு வகுப்பு எடுத்தது அன்பு அண்ணா, அவர் தன்னை பற்றி எளிமையாகவும் , எதார்த்தமாகவும், அறுமுகபடுத்த தொடங்கி எவ்வாறெல்லாம் எளிமையாக படிக்கலாம் என்பதையும், ஞாபக சக்தியை எவ்வாறு அதிகபடுத்துவது என்பதையும் மிக எளிமையாக கற்று தந்தார், பின்னர் அயான் தொண்டு நிறுவனம் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மேற்படிப்பிற்கு உதவித் தொகை தருவதை பற்றி கூறினார்கள். என் தேர்வின் முடிவிற்குப் பின் அயான் தொண்டு நிறுவனத்திற்கு சென்றேன். அங்கு தன்னர்வலராக சேர்ந்தேன். பின்னர் scholarship உதவியுடன் எனது படிப்பை 2021-ல் முடித்தேன். இப்போது NETLINK எனும் Software Pvt Ltd. துறையில் பணிபுரிந்து வருகிறேன். எனது ஆண்டு வருமானம் 3 இலட்சம். என் வாழ்க்கையை என் ஆசைக்கு ஏற்றார் போல் மாற்றிய அயான் தொண்டு நிறுவனத்திற்கு என் நன்றியை தெரிவித்துகொள்வதோடு, இன்னும் ஏழை, எளிய மாணவர்களுக்கு வாய்ப்பு கொடுக்குமாறு கேட்டுகொள்கிறேன்.
வணக்கம், நான் மதன், ஊத்துக் கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த நான் 12ஆம் வகுப்பு போது தேர்வில் 985 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மாணவனாக வந்தேன். சிறு வயதில் இருந்து எனக்கு SOFTWARE ENGINEER ஆக வேண்டும் என்கிற ஆசை இருந்தது, ஆனால் என் குடும்ப பொருளாதார நிலை சரியில்லை, அப்போது தான் அயான் அறக்கட்டளையை தொடர்பு கொண்டேன். அவர்கள் என்னை நல்ல கல்லூரியில் சேர்த்து இலவசமாக பொறியியல் துறையில் ECE பிரிவை எடுத்து என்னை பயின்று வர வழிவகை செய்தனர். நான் விடுதியில் தங்கி என்னுடைய படிப்பை முடித்தேன். நான்காம் ஆண்டு பயிலும் போது எனது கல்லூரியில் TRAINING AND PLACEMENT CELL மூலமாக எனக்கு உலகில் தலைசிறந்து விளங்கும் “TATA CONSULTANCY SERVICE”-ல் வேலை வாங்கி கொடுத்தனர். அயராது உழைத்ததால் சிறுவயதில் நான் கண்ட இலட்சியத்தை அடைய முடிந்தது என்று சுலபமாக சொல்லி விட முடியாது, ஏன்னென்றால் இதற்கு காரணமாக இருந்த அயான் பவுண்டேசனுக்கு என் மனம் நெகிழ நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
Thirumagal Dear Ayaanfoundation, I am Writing to express my sincere gratitude to you for choosing me as a ayaanfoundation volunteer. I am deeply appreciative of your support and all the good that you did. As a ayaan volunteer, I enhanced my skills. Because of what you have done for me, I can follow my dreams and graduate with my under graduate degree in 2022. Thank you again for your important financial support.
Hello Ayaanfoundation, My self Haripriya, I would like to express gratitude for the ayaanfoundation. Ayaanfoundation had played a vital role by financially assisting me to get a gold medal in engineering and IAS Academy situated in college campus helped me a lot to keep in touch with my childhood dream to be an IAS officer. I have learn leadership qualities from anbu sir and sekar sir in volunteer students to be a volunteer of ayaanfoundation to assist carrier guidance all over tamilnadu. I will always remain gratitude to you sir. Since my life has changed, I hope ayaanfoundation would change the lives of many students to pursue a better carrier. Thank you to ayaanfoundation.
நான் V.கெளசல்யா, நான் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்தேன். அயான் பவுண்டேசன் என் பள்ளியில் வந்து வாழ்வியல் திறன் பயிற்சி எடுத்தார்கள். நான் 12 ஆம் வகுப்பில் 1075 மதிப்பெண் எடுத்தேன். இதன் மூலம் எனக்கு மேற்படிப்பிற்கான கல்வி உதவித்தொகை கிடைத்தது. பின்பு என்னை வாழ்வியல் திறன் பயிற்சியாளராக மாற்றினார்கள். எங்களை படிப்பில் மட்டுமல்லாமல், எங்கள் திறமைகளை கண்டுணர்ந்து வெளிக்கொண்டு வந்தார்கள். பல வழிகளில் எங்களுக்கு வழிகாட்டினார்கள், இவர்கள் ஒரு நிறுவனமாக மட்டுமல்லாமல், தங்கை, மகள் போன்று எங்களுடன் இருந்து வருகிறார்கள். இப்பொது நான் kaarunesh construction எனும் நிறுவனத்தில் ஆண்டு வருமானம் 2.7 இலட்சத்தில் வேலை பார்த்துக்கொண்டு வருகின்றேன். நான் துவண்டு போகும்போதெல்லாம், என்னை உற்சாகப்படுத்தியும், என் திறமைகளை சொல்லி என்னை முன்னேற வைத்துக் கொண்டிருந்த அயான் பவுண்டேசன் குழுவினருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
நந்திவரம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் படித்த நான் 12ஆம் வகுப்பு பொது தேர்வில் 1025 மதிப்பெண்கள் பெற்றேன் அடுத்து என்ன செய்யலாம் என்று தேடியபொழுது. இந்த அறக்கட்டளை கோடைக்கால பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டேன். அங்கு என்னை போன்ற சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். இதில் எனக்கு ஆங்கிலத்தில் பேச பயிற்சி, கணினி பயிற்சி அளித்ததோடு மட்டுமல்லாமல் அலுவலக பணிகள் மற்றும் நிற்வாகம் குறித்த பயிற்சி அளித்து என் ஆளுமை திறமையை வளர்த்துகொள்ளவும் மேற்படிப்பில் ஊக்கத்தோடு படிப்பதற்கும் என்னை தயார்படுத்தினார்கள். என்னுடையா COMPUTER SCIENCE ENGINEERING படிப்பு முழுவதையும் ஏற்று படிப்பு முடியும் வரை உறுதுணையாக இருப்போம் என்றும், நல்ல வேலை வாய்ப்பை பெறும் வரை எனக்கு ஆலோசனைகள் தருவதாகவும் உறுதி அளித்தார்கள். இன்று நான் பொறியியல் பட்டதாரி, புகழ்பெற்ற INFOSYS நிறுவனத்தில் மாத வருமானம் ரூ 20000 த்தில் பணிக்கு சேர்ந்துள்ளேன். என் வாழ்க்கை தரத்தை உயர்த்திய என்னை போன்ற் பல மாணவர்களின் வெற்றியில் பங்களித்து வரும் அறக்கட்டளைக்கு என் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.
வணக்கம் என் பெயர் R.கோகிலா, நான் ராணிபேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2021-ல், 12-ஆம் வகுப்பு பள்ளி படிப்பை முடித்தேன்.12-ஆம் வகுப்பில் 553/600 மதிப்பெண்கள் எடுத்தேன். எனது தந்தையும் , தாயும் கூலி வேலை செய்து என்னை படிக்க வைத்து கொண்டிருந்தனர். மேற்படிப்பு படிக்க போதுமான அளவில் என் பெற்றோர்களிடம் வசதி இல்லை. என்ன படிப்பது என்ற குழப்பத்தில் இருந்தபோது அயான் பவுண்டேசன் நிறுவனத்திலிருந்து எனக்கு உதவித் தொகைக்கான அழைப்பு வந்தது. அவர்கள் ஏற்கனவே ஜனவரி மாதத்தில் எங்கள் பள்ளிக்கு வருகை தந்து மாணவர்களுக்கான ஊக்கத்தை அளிக்கும் வகையிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தினர். அதில் மதிப்பெண் அடிப்படையிலும், குடும்ப பொருளாதார அடிப்படையிலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வி உதவித் தொகை வழங்குவதைப் பற்றி கூறினார்கள். ஆகவே நேரில் சென்று நேர்முக தேர்வில் கலந்து கொண்டேன். எனது மதிப்பெண் அடிப்படையில் எனக்கு கல்வி உதவித் தொகை கிடைத்தது. இந்த வாய்ப்பை வழங்கிய அயான் பவுண்டேசன் எனும் தொண்டு நிறுவனத்திற்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
வணக்கம் என் பெயர் T.ராகுல் , நான் ஆரணி சுப்ரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளியில் 2021-2020 ஆண்டில் படித்துக் கொண்டிருக்கும் போது அயான் பவுண்டேசன் எனும் தொண்டு நிறுவனம் எங்கள் பள்ளியில் வந்து வாழ்வியல் திறன் பயிற்சி எடுத்தார்கள். அந்த உரையாடல் மாணவர்கள் மத்தியில் புத்துணர்ச்சியும், மன தைரியத்தையும், வாழ்க்கையில் அணைவராலும் வெற்றி பெற முடியும் என்ற தன்னம்பிக்கையிம் கொடுத்தன. பிறகு போது தேர்வு முடிந்து தேர்வுகள் வெளிவந்த பிறகு கல்வி உதவித் தொகைக்காக தொடர்பு கொண்டேன். என் வீட்டு பொருளாதார சூழ்நிலையை அடிப்படையாக கொண்டும் மற்றும் என் மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டும் எனக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. இப்போழுது நான் சிறந்த கல்லூரியில் பட்டபடிப்பை படித்து வருகிறேன்.இதற்கு காரணமாக இருந்த அயான் பவுண்டேசனுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என் வாழ்க்கை தரத்தை உயர்த்த வழிவகுத்த என்னை போன்ற பல மாணவர்களின் வெற்றியில் பங்களித்து வரும் அயான் அறக்கட்டளைக்கு எங்கள் குடும்பமும் நானும் மிகவும் கடமைப்பட்டுள்ளோம்.
வணக்கம், என்னுடைய பெயர் வ.இளவரசி. நான் 1 முதல்12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழி கல்வி பயின்று உள்ளேன். என்னுடைய குடும்பம் மிக ஏழ்மையான குடும்பம். கை தொழில் ஒன்றை மட்டுமே செய்து கொண்டிருக்கிறோம். என்னுடைய பெற்றோர் நெசவு தொழில் செய்து வருகின்றனர். நான் பள்ளியில் பயின்று வரும் போது ஒரு நாள் அயான் பவுண்டேசன் எனும் தொண்டு நிறுவனத்தின் சார்பாக எனது பள்ளிக்கு வருகை புரிந்து, நீங்கள் எவ்வாறு படிக்க வேண்டும் , படிப்பின் முக்கியத்துவம் மற்றும் வாழ்க்கையின் மாற்றத்திற்க்கான வாய்ப்புகளை எவ்வாறு பயன்படுத்துவது போன்ற பல தொழில் நுட்ப படிப்புகளை பற்றியும் ஒரு விழிப்புணர்வு கொடுத்தனர். பின்னர், நான் மதிப்பெண் அடிப்படையில் கல்வி உதவித் தொகைக்காக தேர்வு செய்யப்பட்டேன். எனக்கு இலவச கல்வி கொடுத்து என்னை உயர் கல்வி தொடர வாய்ப்பளித்த அயான் பவுண்டேசன், நிறுவனர்,செயலாளர்கள் மற்றும் குழுவினர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
அயான் பவுண்டேசன் நிறுவனத்திற்கு வணக்கம், எனது பெயர் லோ. சஞ்சய்நாதன், நான் திருவண்ணாமலை மாவட்டம் தலையாம்பள்ளம் கிராமத்தில் வசித்து வருகிறேன். எனது குடும்பம் ஏழை விவசாய கூலி வேலை செய்து வருகின்றனர். நான் எனது கிராமத்தில் அருகில் உள்ள தச்சம்பட்டு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு வரை பயின்றேன். எங்கள் பள்ளியில் அயான் பவுண்டேசன் மூலமாக 2 மற்றும் 3 ஆண்டுகளாகவே பொறுப்பாளர்கள் வந்து எங்கள் பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தியும் கிராமப்புற ஏழை மாணவர்கள் 10க்கும் மேற்பட்டவர்கள் வருடந்தோறும் தேர்வு செய்து சிறந்த கல்லூரியில் படிக்க உதவித் தொகை கொடுத்துக் கொண்டு வருவதும் நன்றாக தெரியும். நான் 10 ஆம் வகுப்பில் 423/500 மதிப்பெண்களும், 11ஆம் வகுப்பில் 474/600 மதிப்பெண்களும் மற்றும் 12 ஆம் வகுப்பில் 536/600 மதிப்பெண்களும் எடுத்து தேர்ச்சி பெற்றேன். அயான் பவுண்டேசன் அளித்த ஊக்கத்தால் ஒரு நல்ல கல்லூரியில் 100% இலவசமாக பயில என்னை தேர்ந்தெடுத்தார்கள். எனது உயர்க்கல்வி கனவினை நனவாக்கிய அயான் பவுண்டேசன் நிறுவாகத்திற்கு நன்றி கடன் பட்டுள்ளேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
My name is S.Abinaya, I am from Thiruvannamalai district. I have completed my 12th in government girls higher secondary school in melpallipattu, near chengam, I have scored 407/500 in and 527.44/600 in HSC. My parents occupation is daily wages. I belongs to poor family, because of my family situation, my parents cannot have enough money to pay for my higher studies. I worried let about my career. At that time I seek help from ayaanfoundation, guindy Chennai. They come to my home speak with my parents. They gave scholarship money for my higher studies. Before that I meet them in my school, there ayaanfoundation members came and gave a brief explanation about the foundation. And also they conduct motivation classes among students . In that class they said about the scholarship for students who are scored good marks and poor. They choose students regarding their marks, family situation. The scholarship helps me a lot. Now I am studying engineering in a best college. I thanka Ayaan Foundation to gave me opportunity for my higher studies. Thank you so much..
வணக்கம், C.வேல் முருகன், செந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து கொண்டிருக்கும் போது அயான் பவுண்டேசன் எனும் தொண்டு நிறுவனத்திலிருந்து எங்கள் பள்ளிக்கு வந்தனர். எங்கள் பள்ளி மாணவர்களுக்கு வாழ்வியல் திறன் பயிற்சியை மிக அருமையாக அளித்தனர். மதிப்பெண் அடிப்படையில் உதவித் தொகை வழங்குவது பற்றியும் கூறினர். இந்த வகுப்பில் எங்கள் திறமைக்கு ஏற்ப வழிகாட்டுதலும், ஊக்கமும் கொடுக்கப்பட்டது. நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவன். விளையாட்டில் அதிக ஈடுபாடு உள்ளவன். அவர்களிடம் மதிப்பெண் மற்றும் விளையாட்டில் நான் வெற்றி பெற்ற சான்றிதழ்களையும் காண்பித்தேன். பின்னர் எனது மதிப்பெண் மற்றும் விளையாட்டில் வெற்றி பெற்ற சான்றிதழ் மூலம் என் மேற்படிப்பைத் தொடர எனக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது. நான் எனது மேற்படிப்பை பயின்று வருகிறேன்.எனக்கு கல்வி உதவித் தொகை வழங்கி, எனது படிப்பை தொடர காரணமாக இருந்த அயான் பவுண்டேசனுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
எனது பெயர் இரா. யாஷினி. நான் கடலூரில் உள்ள திருப்பாதிரிபுலியூரில், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும் போது, அயான் தொண்டு நிறுவனத்திலிருந்து மாணவர்களை ஊக்கமளிக்கும் வகையில் MOTIVATION CLASS ஒரு மணி நேரம் எடுத்தனர். அந்த வகுப்பில் வாழ்வில் நாம் எவ்வாறு வெற்றி அடைவது என்பது பற்றியும், உன்னால் சாதிக்க முடியும் என்பது பற்றியும் ஊக்கமளிக்குமாறு கூறினார்கள். அதேபோல் நாங்கள் அதிக மதிப்பெண் எவ்வாறு பெறுவது என்பதை பற்றியும் கூறினார்கள். அந்த நேரத்தில் நாங்கள் அதிக மதிப்பெண் பெற்றால் நாங்கள் படிக்க வைப்பதாகவும் கூறினார்கள். நானும் அவர்கள் கூறியது போல் அதிக மதிப்பெண் பெற்றேன். எங்கள் வீட்டில் குடும்ப பொருளாதரம் மற்றும் குடும்ப சூழ்நிலையால் மேற்படிப்பு படிக்க வைப்பதற்கு வசதி இல்லை. அப்போது அயான் தொண்டு நிறுவனத்திலிருந்து கூறியது போல், எனக்கு மேற்படிப்பு படிப்பதற்கு அயான் நிறுவனமே முழு செலவையும் ஏற்றுக்கொண்டது. எனது பட்ட படிப்பை தொடர உதவி புரிந்த இந்த அயான் பவுண்டேசனுக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன்.
என் பெயர் M.சினேகா, நான் மணலூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்தேன், அப்படி படிக்கும்போது எனது பள்ளிக்கு திரு.அன்பரசன் அவர்கள் வந்து வாழ்க்கை பற்றியும் படிப்பை பற்றியும் நல்ல நல்ல கருத்துக்களை எங்கள் மனதில் பதியும் அளவிற்கு பேசினார். நல்ல மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்கள், குடும்ப பொருளாதார அடிப்படையில் கஷ்டபடுகின்ற மாணவர்களை அவர்களின் அயான் பவுண்டேசன் மூலமாக படிக்க வைப்பதாக கூறினார்கள். நானும் படித்து 12-ஆம் வகுப்பில் 433/600 மதிப்பெண்கள் எடுத்தேன். என் குடும்ப சூழ்நிலை காரணமாக என்னால் படிக்க முடியாத நிலையில் இருந்த போது. அவர்கள் என் குடும்பத்தினரிடம் பெண் கல்வியின் முக்கியத்துவம் பற்றி பேசி. என்னை இலவசமாக , கல்வி உதவித் தொகையுடன் படிக்க வைப்பதுடன், என்னை போன்று பல மாணவர்களையும் படிக்க வைத்து கொண்டிருக்கின்றனர். நாங்கள் எப்போதும் திட்ட இயக்குநர் திரு ம. அன்பரசன் அவர்களுக்கும் அயான் பவுண்டேசன் நிறுவனருக்கும் மற்றும் குழுவினருக்கும் நாங்கள் எப்பொழுதும் கடமைப்பட்டுள்ளோம். இந்த உதவியை நாங்கள் உயிர் உள்ளவரை மறக்கமாட்டோம், மிக்க நன்றி.
என்னுடைய பெயர். V.பிரியதர்ஷினி, நான் கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வட்டத்தில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் எனது 12-ஆம் வகுப்பு படிப்பை முடித்தேன். நான் சிறு வயதிலே என்னுடைய பெற்றோர்ளை இழந்ததால். என்னுடைய உறவினர் வீட்டில் இருந்து படித்தேன். நான் 10 ஆம் வகுப்பில் 417 மதிப்பெண்களும், 12ஆம் வகுப்பில் 460 மதிப்பெண்களும் எடுத்தேன். என்னுடைய குடும்ப சூழ்நிலையின் காரணமாக என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த சூழலில், அயான் பவுண்டேசன் என்னை தொடர்பு கொண்டு எனக்கு நம்பிக்கையும் , மனதைரியத்தையும் கொடுத்து, கல்வி உதவித்தொகையும் கொடுத்து எனனை படிக்க வைத்து கொண்டிருக்கின்றனர். இந்த பெரிய வாய்ப்பை கொடுத்து , என் வாழ்க்கையை மாற்றிய இந்த அயான் பவுண்டேசன் எனும் தொண்டு நிறுவனத்திற்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன். என்னுடைய நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நான் S. மகாலட்சுமி, நான் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் படித்தேன். அயான் பவுண்டேசன் எனது பள்ளிக்கு வந்து வாழ்வியல் திறன் பயிற்சி கொடுத்தனர். ஒரு மணி நேரத்தில் வாழ்க்கைக்கான பல கருத்துக்களை எடுத்து கூறினர். மாணவர்களின் மதிப்பெண் மற்றும் குடும்ப பொருளாதர அடிப்படையில் கல்வி உதவித்தொகை கொடுப்பதாக கூறினார்கள். நான் படித்து முடித்தும் மிக கஷ்டத்தில் இருந்தேன். என் தந்தை கூலி வேலை செய்து எங்கள் வாழ்வாதரத்தை பார்த்துக்கொண்டிருத்தார். அந்த நேரத்தில் அயான் பவுண்டேசன் என்னை தொடர்பு கொண்டனர், அவர்கள் என் குடும்ப நிலை அறிந்து என்னை தேர்வு செய்து கல்வி உதவித்தொகை வழங்கி என்னை படிக்க வைத்து கொண்டிருக்கின்றனர். என் மேற்படிப்புக்கு உதவி செய்த அயான் பவுண்டேசனுக்கு பல மடங்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
எனது பெயர் k.கார்த்திகேயன். நான் 12ஆம் வகுப்பு ஸ்ரீ இராமகிருஷ்ணா வித்தியாசாலை மேல்நிலைப் பள்ளியில் படித்துகொண்டிருக்கும்போது அயான் பவுண்டேசன் உறுப்பினர்கள் வருகை புரிந்து MOTIVATIONAL CLASS எடுத்தார்கள். நாங்கள் 12ஆம் வகுப்பு பொது தேர்வினை எதிர்கொள்வது எப்படி மற்றும் எங்கு படிக்கலாம், எப்படிப் படிக்கலாம், படிப்பின் முக்கியத்துவம் பற்றியும் ஒரு மணி நேர வகுப்பு எடுத்தனர். அது எனது வாழ்க்கையில் மிக சிறந்த வழிகாட்டுதலாக அமையும் என எதிர்பார்க்கவில்லை. ஆனால் அமைந்தது, பெரும் மகிழ்ச்சி. நான் பொது தேர்வை சிறப்பான முறையில் எழுதி 389 மதிப்பெண்கள் எடுத்தேன். நான் அயான் பவுண்டேசனுக்கு தொடர்பு கொண்டு எனது மதிப்பெண் மற்றும் என்னால் மேற்படிப்பு படிக்க இயலாமை, வீட்டின் பொருளாதார சூழ்நிலை பற்றி கூறினேன். தற்போது அயான் பவுண்டேசன் சார்பில் professional course படிக்கிறேன். அதற்கு முழு முதற்காரணமாக இருக்கும் அயான் பவுண்டேசனுக்கு என் குடும்பத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.